மத்தியில் ஆளும் பிஜேபி அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர்களில் நடிகர் பிரகாஷ் ராஜும்ஒருவர். இந்த நிலையில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தான் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக பிரகாஷ் ராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.இந்நிலையில்,தனது சமூக வலைதளத்தில் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளதாவது,
வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தல். எனது புதிய பயணத்திற்கு ஆக்கமும்,ஊக்கமும், வாழ்த்தும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நான் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் முழு விவரங்களை நான் ஊடகங்கள் வாயிலாக தெரிவிப்பேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.