தமிழ்நாட்டில் தல யின் விஸ்வாசத்துடன் கடும் போட்டியில் இறங்கியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட ஆந்திராவில் மூன்று படங்களுடன் மோத வேண்டியதிருக்கிறது.
சங்கராந்தியை முன்னிட்டு வியாழக்கிழமை என்.டி.ஆர் .வாழ்க்கை வரலாறு படம் வெளிவருகிறது.ஆந்திர மக்கள் பெரிதும் எதிர்பார்க்கிற படம் இது.
இதே நாளில் பேட்டயும் ரிலீஸ். மறுநாள் வினய்,விதேய,ராமா,என்கிற படமும் எப்.2 என்கிற படமும் வெளியாகிறது.ஆக இந்த மூன்று படங்களும் ஆந்திர மக்களின் எதிர்பார்ப்புக்குரிய படம்.
இந்த படங்களுடன்தான் ரஜினி மோதுகிறார். அண்மையில் ஆந்திராவில் வெளியாகிய வெளி மாநில படங்களில் கே.ஜி.எப் ,மட்டும்தான் இரட்டை லாபம் கொடுத்திருக்கிறது. அதைப்போல பேட்ட லாபம் தருமா?