சிம்ரனுக்கு பிறகு வசமான இடுப்பு சாய் பல்லவிக்குத்தான்! இவரளவுக்கு தற்போதைய நடிகைகளுக்கு ஆட்டம் வராது என்றே சொல்லலாம். எட்டு வருஷங்களுக்கு முன்பு தனுஷின் கொல வெறி பாட்டு ஒரு கோடிக்கு மேல யூ டியூப்பில் லைக்குகளை அள்ளியது.ஒண்ணரை கோடியை தாண்டியது. அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய பாடல் அது. சாதனை படைத்த பாடலை தெலுங்கு ‘பிடா’ படத்தின் பாடல் முறியடித்திருக்கிறது. சக்தி காந்த் கார்த்திக் இசையில் “வச்சிண்டே மேலா மேலாக வச்சிண்டே” என்கிற பாடலுக்கு சாய்பல்லவியின் செம ஆட்டம் மிகப்பெரிய பிளஸ். நூத்தி எழுபத்தி நாலு மில்லியன் லைக்குகளை வாரி குவித்து கொல வெறி சாதனையை முறியடித்திருக்கிறது.