சண்டிவீரன் – விமர்சனம்
( 2.5 / 5.0 )
Direction : A. Sarkunam
Production : B Studios
Starring : Atharvaa, Anandhi
Music : S. N. Arunagiri
Cinematography : P. G. Muthiah
சிங்கப்பூரில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்து சிங்கப்பூர் காவல் துறையினரால் “ரோத்தா” என்னும் பிரம்படி தண்டனை வாங்கி சம்பாதித்த பணத்தை எடுத்துக் கொண்டு , சொந்த ஊரில் தொழில் செய்து பிழைத்துக்கொள்ள வருகிறார் அதர்வா. அங்கே, ஊரில் உள்ள சிலர் முன் விரோதம் காரணமாக பக்கத்து கிராமத்துக்கு குடிக்கக்கூட தண்ணீர் தரமால் ஒரு கிராமத்தையே சித்ரவதை செய்கிறார்கள். இதையெல்லாம் அறியாத அதர்வா, இதற்கெல்லாம் காரணமான ஊர்த் தலைவர் லாலின் மகளான ஆனந்தியை விரட்டி விரட்டி காதலித்து வருகிறார்.இந்நிலையில் தன நண்பனைப் பார்க்க பக்கத்து ஊருக்கு செல்லும் அதர்வா, அந்த ஊரில் குடிதண்ணீர் கிடைக்காமல் உப்புத்தண்ணீரில் வாழ்க்கை நடத்தும் அவலத்தையும் அதன் காரணமாக பலர் செத்து மடியும் கொடுமையையும் பார்க்கிறார். இரண்டு ஊருக்கும் பொதுவான குளம் ஒன்றை ஒவ்வொரு வருடமும் ஏலம் எடுக்கும் தன் ஊர்த் தலைவர் , அதை பக்கத்து ஊர்க்காரர்கள் குடிப்பதற்கு பயன்படாதபடி கோழி இறைச்சிகளை கலந்து அசுத்தம் செய்வதை தெரிந்து கொள்கிறார் இந்த ஊருக்காக தான் பல வருடங்களுக்கு முன்பு அதர்வாவின் தந்தை ஒரு கலவரத்தில் இறந்து போனது நினைவுக்கு வர,உடனே அதர்வா, அந்த ஊர் மக்களின் நியாயத்திற்காக போராட, அதே சமயம் ஊர்த்தலைவர் லாலுக்கு இவர்கள் காதலும் தெரியவர, இதற்கிடையில் இரண்டு ஊர்களுக்கு இடையே பெரிய கலவரம் வெடிக்கின்றது.. இந்த கலவரத்தைப் பயன்படுத்தி அதர்வாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்கிறார் ஊர்த்தலைவர் லால். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதை! ‘களவாணி’, ‘வாகை சூட வா’ படங்களைத் இந்த ‘சண்டிவீரன்’ மூலமும் மீண்டும் கிராமத்து கதையில் களமிறங்கியிருக்கிறார். இப்படத்திலும் கிராமத்து மனிதர்களின் யாதர்த்த வாழ்வியலை சிறப்பாகவே படமாக்கியிருக்கிறார். ஆனால், தண்ணீர் கிடைக்காமல் தத்தளிக்கும் ஒரு கிராமத்தின் வலியை தன் அழுத்தமற்ற திரைக்கதை மூலம் ரசிகர்களுக்கு கொண்டு செல்வதில் பாதி வெற்றியைத்தான் அவரால் பெற முடிந்திருக்கிறது. முதல் பாதியில் இருந்த திரைக்கதை பிற்பாதியில் தடுமாறி, தடம் மாறி சென்று விடுவதால் சண்டிவீரன் ,நொண்டி விடுகிறான். ஆனந்தி பக்கத்து வீட்டு கிராமத்துப் பெண் போல பாவடை தாவணியில் அழகாக,தன் கண்களாலேயே அனைவரையும் கவர்ந்து விடுகிறார்.தஞ்சை வயலின் அழகு, கிராம மக்களின் யதார்த்தமான நடிப்பு என நாமே அந்த ஊருக்குள் சென்று வந்தது போல் உள்ளது.அதரவா பரதேசி படத்திற்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரம்,நன்றாக நடித்துள்ளார். தன் கண்களாலேயே அனைவரையும் கவர்ந்து விடுகிறார்.அருணகிரியின் இசையில் பாடல்கள் அணைத்து சூப்பர் ரகம். குறிப்பாக அழுங்குறேன் குலுங்குறேன் பாடல் .பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு செம குளுமை ! பசுமையான கிராமிய சூழலில், ஈரம், வீரம், வம்பு, தும்பு, பாசம், நேசம் உள்ளிட்ட கிராமிய மனித சிறப்புகள் இம்மியும் பிசகாமல், வெகு நேர்த்தியாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் சற்குணம். மொத்தத்தில் சண்டிவீரன் சராசரி படங்களின் வரிசையில் மட்டுமே இடம் பிடித்துள்ளது.