இன்னும் ரஜினி மக்கள் மன்றமாகவே இருக்கிறது…கட்சியாக மாறவில்லை. ரசிகர்கள் இனிமேல் காவலர்களாக அழைக்கப்படுவார்கள் என்று சூப்பர்ஸ்டார் ரஜினி சொல்லியும் இன்னும் ரசிகர்களாகவே கட் அவுட் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கட்சி அட்டை எப்போது வழங்கப்படும் என்று தெரியவில்லை. இந்த நிலையில் ரசிகர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விட்டிருக்கிறார் ரஜினி!
மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ் அப் குருப்களில் இருந்து உடனடியாக நீக்கவேண்டும்.மறு உத்திரவு வரும்வரை சேர்க்கக்கூடாது.அப்படி சேர்த்தால் குருப் அட்மின்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட,ஒன்றிய,நகர,வாட்ஸ் அப் குரூப்களில்பிற மாவட்ட நபர்களை சேர்க்கக்கூடாது.வாட்ஸ் அப் குரூப்களில் அந்தந்த மாவட்ட உறுப்பினர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்பதாக கடுமையுடன் சொல்லி இருக்கிறார் தலைவர்.