சமந்தா – நாக சைதன்யா ஜோடி தற்போது ‘ஆம்ஸ்டெர்டாமு’க்கு சுற்றுலா சென்றுள்ளது.அங்கு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் சமந்தா-நாக சைதன்யா ஜோடி முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.அதே சமயம், சமந்தா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களில் அதற்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. என்றாலும்,
இன்ஸ்ட்டாகிராமில் அவர் புகைப்படங்களில் குறிப்பிட்ட பதிவுகள் தான் காரணம்.” ஸ்ட்ரோலிங் இன் டூ த நியூ இயர். 2019 ❤என்றும்,அதீத எதிர்பார்ப்புடன் என மற்றொரு புகைப்படத்தின் கீழேயே, ‘எனக்கு ஏன் ஊறுகா வாங்கித்தரமாட்றீ ங்க’ என ஒரு புகைப்படத்திலும் குறிப்பிட்டுள்ளார்.அவர் பயன்படுத்தியுள்ள ஊறுகாய் அதீத எதிர்பார்ப்பு போன்ற வார்த்தைகளை பார்த்த ரசிகர்கள் சமந்தா கர்ப்பம் என கூற ஆரம்பித்துவிட்டனர்.சமந்தா கர்ப்பமா? இல்லையா? என்பதை சம்பந்தப்பட்ட சமந்தா தெளிவு படுத்துவாரா?