பிரியாணியை அள்ளி ஒரு வாய் வைக்கும்போதுதான் குரல்வளையில் கத்தியை வைத்து கடனை கொடுன்னு மிரட்டுவது மாதிரி விஸ்வாசம் படத்துக்கு ஒரு கஷ்டம்.
கோவை,திருப்பூர்,ஈரோடு ஆகிய மூன்று இடங்களிலும் விஸ்வாசம் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. பைனான்சியர் ஒருவருக்கு தயாரிப்புத் தரப்பு 7 8 லட்சம் கடன் பாக்கி. பணத்தை செட்டில் பண்ணாமல் படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு தயாரிப்பு தரப்பு இன்று முப்பத்தியெட்டு லட்சத்தை உடனே கட்டி விடுவதாகவும் மீதி நாப்பது லட்சத்தை நாலு நாட்களில் கட்டி விடுவதாகவும் சொல்லி பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இந்த மனுவை அவசர மனுவாக இன்று மதியம் கோர்ட்டு விசாரிக்கிறது.படம் வருமா வராதா என்கிற கவலையில் மூன்று பெருநகரங்களில் இருக்கிற அஜித்குமார் ரசிகர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.