தமிழ்த் திரையுலகில் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்களின் நடிப்பில் உருவான திரைப்படங்கள் வெளியாகும் போது, திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடுவது வழக்கம். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ ரஜினியின் பேட்ட, தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களின் சிறப்பு காட்சிகள் நாளை அதிகாலை வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காத்து இருந்தனர்.
இந்நிலையில், பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு இதுவரை எவ்வித அனுமதியு ம் வழங்கப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூகூறியுள்ளார். மேலும், திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் முதற்கட்டமாக ரூ .50,000 அபராதம் விதிக்கப்படும்என்றும்,இதனை மீறுவோர் மீது 2-வது கட்டமாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும்,இறுதி கட்டமாக திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.