“நாக்கு சிவக்க சுண்ணாம்பு வேணும் நானும் சிவக்க மச்சான் வேணும் “கிற மாதிரி நடிகர்கள் சிறக்க ரசிகர்கள் வேணும்.
தங்களுக்கு பிடித்த நடிகர்களை விதம் விதமான பட்டங்களை சூட்டி அவர்கள் அழகு பார்த்துக் கொள்கிறார்கள்.
நடிகர் திலகம்,மக்கள் திலகம் என்கிற சிறப்புப் பெயர்கள் எம்.ஜி.ஆர்.,சிவாஜிக்குப் பிறகு வேறு யாருக்கும் பொருந்தவில்லை.பொருந்தவும் செய்யாது.
ஆனால் சூப்பர் ஸ்டார் என்கிற பொதுவான அந்த பெயர் அந்தந்த மாநிலங்களில் வேறுபடுகிறது.
தமிழ்நாட்டில் யார் வசூல் மன்னனோ அவர்கள் அனைவருமே சூப்பர் ஸ்டார்கள்தான்.ஆனால் அது தற்போது ரஜினிகாந்துக்கு பொருந்துகிறது.
விஜய்,அஜித், சூர்யா.கார்த்தி, சிம்பு,விஜயசேதுபதி விஷால்,சிவகார்த்திகேயன் ஆகிய சிறப்புக்குரிய நடிகர்களுக்கு அவர்களது ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான பட்டங்களை சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆர்ப்பரிக்கிறார்கள்.
இதற்கு சோதனை வந்தது போல அரசியல் தலைவர்களில் சிலர் வினையை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சர்கார் சோதனையில் இருந்து மீண்டு வந்திருக்கும் தளபதி விஜய்யின் கால் ஷீட் கிடைக்காத வருத்தத்தில் செந்தமிழன் சீமான் “அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் இல்லை.சிம்புதான்” என்று கொம்பு சீவி விட்டார்.
சின்ன வயதிலேயே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்கிற சிறப்பினை பெற்றவர் சிம்பு . சீமான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதினாலேயே இந்த புகழுரை என்பதை சிம்பு உணராமல் இருப்பாரா என்ன,?
அவருக்கு இருக்கும் ரசிகாஸ் ஆர்மி நாட்டையே புரட்டி போட்டுவிடும். இது புரியாமல் இருக்குமா அமீருக்கு?
“சீமான் சொன்னால் சிம்பு சூப்பர்ஸ்டார் ஆகிவிடுவாரா என்ன,எம்.ஜி.ஆர்.கூட தனது கலை உலக வாரிசு பாக்யராஜ்னு சொன்னார்.சூப்பர் ஸ்டார் ஆகிட்டாரா? கமல் கூட தனது இடத்தை மாதவன் நிரப்புவார்னு சொன்னார் நிரப்பிட்டாரா.இதெல்லாம் அன்பு மிகுதியால் சொல்வது?அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதை மக்கள்தான் சொல்லணும் “என்றிருக்கிறார்.
தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடிக்கொண்டிருக்கும் சீமான்,அமீர் இருவரும் எதற்காக சீறுகிறார்கள் என்பதை பாருங்கள்.
எப்படியெல்லாம் வம்பு இழுக்கிறார்கள் , மக்களே!