எம்.குமரன் s/o மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அசின் அதன் பின்னர் முன்னணி நடிகர்களுடன் சிவகாசி, காவலன்,, ஆழ்வார், கஜினி, வேல், தசவாதாரம் போன்ற பல படங்களில் நடித்தவர் அதன்பின்னர் பாலிவுட் படங்களிலும் நடித்தவர் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார் .இருவரும் ஒன்றாக ஊர் சுற்றிவருகின்றனர் என்றும் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால் தற்போது மொபைல் போன் உற்பத்தியில் முக்கிய இடத்தில் இருக்கும் ‘மைக்ரோமேக்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் ஷர்மா (வயது 36) என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.. ‘கஜினி’ படத்தில் அசின், தொழிலதிபர் சஞ்சய் ராமசாமியை காதலிப்பது போன்ற காட்சிகள் வரும். ஆனால் தற்போது அவருடைய நிஜ வாழ்க்கையிலேயே ஒரு தொழிபதிபர் விரைவில் கணவராக வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
36 வயதான ராகுல் ஷர்மா, மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தை தோற்றுவித்தவர். அதுமட்டுமின்றி உலகின் மிக இளவயது தொழிலதிபர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அசின் தற்போது இந்தியில் ‘ஆல் இஸ் வெல்” படத்தில் அபிஷேக் பச்சனுடன் நடித்து வருகிறார். இது தவிர அவர் வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.