பேட்ட படத்துக்கு சென்னையில் ஒரு டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக புகார் சொல்லப்பட்டது. ஆனாலும் அது கவனிக்கப்படவில்லை.
ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திர பாண்டி என்பவர் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் ஒரு வழக்குப் பதிவு செய்தார்.
அதில் மதுரையில் உள்ள தியேட்டர்களில் சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
எதற்கோ வைக்கப்பட்ட குறி பொங்கல் படங்களை தாக்கி விட்டது.
நீதிபதிகள் ஆதிகேசவலு,சசிதரன் ஆகியோர் அமர்வு மதுரையில் உள்ள 2 2 தியேட்டர்களில் ரெய்டு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்திரவு பிறப்பித்திருக்கிறது.
அதற்காக மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பேட்ட,விஸ்வாசம் ஓடுகிற தியேட்டர்களில் ரெய்டு நடத்தி பதினெட்டாம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும். மதுரை ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.