மக்கள் நீதி மய்யம் .
உலகநாயகன் கமல்ஹாசன் தலைவர்.
ரஜினி மக்கள் மன்றம், இன்னும் மன்றமாகவே இருக்கிறது.
கட்சியின் பெயரை சூப்பர் ஸ்டார் ரஜினி எப்போது அறிவிப்பாரோ, ஆண்டவனுக்கு மட்டும் தெரியும்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்.
தேமுதிகவின் தலைவர் கேப்டன் விஜயகாந்த்.எதிர்க்கட்சி தலைவர் என்கிற தகுதி வரை சென்றவர்.
கட்சி யாருடைய கண்ட்ரோலில் இருக்கிறது என்பது ரகசியம்.
ஆனாலும் கட்சிக்கு கிளைகள் கிராமம் தோறும் இருக்கிறது.
இந்த நால்வரில் சரத்,விஜயகாந்த் இருவருக்கு தேர்தல் அனுபவங்கள் இருக்கிறது.
ஆளும் கட்சியை அலறவிட்டவர் என்றால் கேப்டனை மட்டுமே சொல்லலாம்.
பிரதமரோ,குடியரசுத் தலைவரோ அவர் யாராக இருந்தாலும் சரி ஜெயலலிதா விரும்பினால் மட்டுமே விமான நிலையம் வரை சென்று வரவேற்பார்.அத்தகைய உருக்கு மனத் தலைவியையே அசைத்துப்பார்த்தவர் கேப்டன்.
வரப்போகிற பாராளுமன்றத் தேர்தலில் இந்த நான்கு நடிகர்களும் ஒன்று சேர்ந்தால் முடிவு மத்திய ,மாநில அரசுகளை அலற விடக்கூடும்.
ஆனால் இவர்கள்தான் சேர மாட்டார்களே!
அவர்களுக்குள் யார் பெரியவர் என்கிற ஈகோ.
பேரறிஞர் அண்ணா,மூதறிஞர் ராஜாஜி போன்ற ராஜதந்திரிகள் இருந்திருந்தால் 1 9 6 7 -ல் ஏற்பட்ட கூட்டணி போல இவர்களை இணைக்கும் வாய்ப்புக்கு வழி இருந்திருக்கும் .
அத்தகைய ராஜதந்திரிகளை எப்போது காணப்போகிறோம்?
தற்போது சரத்குமார் ஒரு தகவலை தெரிவித்திருக்கிறார்.
அதாவது அவரது “சமத்துவ மக்கள் கட்சி கமல்,ரஜினி ஆகிய கட்சிகளுடன் உடன்பாடு வைத்துக் கொள்ளாது. அன்புச்சகோதரர் விஜயகாந்த் விரும்பினால் அவருடன் கூட்டணி வைத்துக்கொள்ளும். திரை உலகில் எனக்கு நண்பர்கள் குறைவு.”என்பதாக சொல்லியிருக்கிறார்.
கமல்,ரஜினி இருவரும் சரத்குமாருடன் பயணம் செய்தவர்கள் மட்டுமே , நண்பர்கள் கிடையாது என்கிறார். இந்த பேச்சு அவரது அரசியலுக்கு எந்த அளவு உதவும்?