கே.எஸ்.அதியமான் நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கி வரும் ‘ஏஞ்சல்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வரும் இப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் யோகிபாபு சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது,
நான் உங்க யோகிபாபு பேசறேன்.நாங்க எல்லோரும் உதயநிதி சாரோட , ‘ஏஞ்சல்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா வந்திருக்கோம் .இங்கு வந்து பத்து நாட்கள் ஆச் சு. ஒன்பதாவது நாளில் தான் இங்கு ஒரு முருகன் கோவில் இருகிறது என்பதையே கண்டுபிடித்துள்ளோம். உலகின் எந்த இடத்தில் தமிழர்கள் இருந்தாலும் அங்கெல்லாம் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானும் இருப்பார் என்பதை புரிந்து கொண்டோம். ரொம்ப சந்தோசமா இருக்கு. முருகனை அனைவரும் வேண்டுவோம்’ என்று கூறியுள்ளார்.வீடியோ இணைப்பு கீழே ,
— Yogi Babu (@iYogiBabu) January 11, 2019