பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்சயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இது ஹாலிவுட்டில் வெளியான ‘வாரியர்ஸ்’ திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் அக்ஷயகுமார், சித்தார்த் மல்ஹோத்ரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஜாக்கிஷெராப் உள்பட பலர் நடித்துள்ளனர். கரன் மல்ஹோத்ரா இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இப்படத் தயாரிப்பாளர் இதை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. . இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய பயிற்சியாளர் என முக்கிய கதாபாத்திரங்களை உள்ளடக்கிய இப்படம், பாக்சிங் போட்டியில் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்ற கதையம்சம் கொண்டது. தமிழில் உருவாகும் இப் படத்தில் விக்ரம், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரையும் , தெலுங்கில் பிரபாஸ், ராம்சரண் மற்றும் ராணா ஆகியோரையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்கள் இப்படத்தை இயக்க முன் வரும் பட்சத்தில் இது சாத்தியமாகலாம் என்கிறது கோலிவுட்.வாரியர்ஸ் வசூலை வாரிகுவித்த படம் என்பது குறிப்பிடதக்கது.