
.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் ‘இளையராஜா75இசை நிகழ்ச்சி ’பிப்ரவரி 2,3, தேதிகளில், நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கப்போகிறது.- கலை நிகழ்ச்சிகள்,நடன நிகழ்ச்சிகள், அரங்கு தோற்றம், பிரம்மாண்டமான LED அகன்ற திரை இப்படி பார்ப்போரை பரவசப்படுத்தும் அனைத்து வேலைகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

‘இளையராஜா75’ டீசர் பல உருவாக்கப்பட்டது . அதை ஒரே நேரத்தில் விஷால், ,கார்த்தி,விஜய்சேதுபதி, ஜெயம் ரவி,ஆர்யா, விஷ்ணு விஷால்,ஜீவா, ,அதர்வா, சந்தானம் மற்றும் நந்தா ஆகிய 10 கதாநாயகர்கள் tweet செய்து பரவசப்படுத்தினார்கள்.இவர்கள் தங்களது twitter பக்கத்தில் இந்நிகழ்ச்சியில் நாங்களும் பங்கு பெறுகிறோம் என்று வீடியோ பதிவேற்றம் செய்து ரசிகர்களையும் வரவேற்று பரவசப்படுத்தியுள்ளார்கள் . பரவசப்படுத்தியுள்ளார்கள்.
பிப்ரவரி 2-ம் தேதி இளையராஜா அனைத்து மொழி ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் விதமாக கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள். இதை அவர் ரசிகர்களுடன் அமர்ந்து பார்க்கிறார். அடுத்தநாள் 3-ம் தேதி இளையராஜா அவரது குழுவினருடன் சேர்ந்து நிகழ்த்தும் மாபெரும் இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக அமைக்கப்படும் மேடையில் நடை பெறுகிறது.




