உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலுக்குப் போனாலும் அவரது ராஜ்கமல் தொடர்ந்து படங்களை தயாரிக்கப்போகிறது. இந்த வகையில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் ‘கடாரம் கொண்டான்” படத்தின் டீசர் வருகிற 1 5 ம் தேதி பொங்கல் திருநாளில் வெளியாகிறது.
சீயான் விக்ரம் ,அக்சராஹாசன் நடித்துள்ள இந்த படம் கடாரத்தில் அதாவது மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது .
“படத்தின் டீசரைப் பார்த்தேன்.எனக்கு முழு திருப்தி.சீயானின் ரசிகர்களும் கொண்டாடுவார்கள் “என்பதாக இயக்குநர் டிவீட் செய்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார்,தல ஆகியோரின் ரசிகர்கள் பண்ணிய அலப்பறையைப் பார்த்து விட்டு வாய்ப்புக்காக காத்திருக்கிற சீயான் ரசிகர்களே இனி உங்கள் நேரம்.கலக்குங்க.!