‘வாலு’ படத்தை திரையில் காண்பதற்காக கிட்டத்தட்ட 3 வருடங்களாக இதோ,அதோ என இழுத்து வந்த வாலு விவகாரம் தற்போது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தரின் தீவிர முயற்சியால் ,கடந்த சில நாட்களாக எதிர்த்தரப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது அனைத்து பிரச்சனைகளும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து ‘வாலு’ வெளியீட்டுக்கு எதிரான இடைக்கால உத்தரவும் தளர்த்தப்பட்டிருக்கிறதாம். இதனால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ‘வாலு’ படம் வரும் சுதந்திரதினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாவது உறுதியாகியிருக்கிறது. இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாளைமுதல் இதன் விளம்பர வேலைகளை டி.ராஜேந்தர் தொடங்குகிறார்.