தோல்விகள் துரத்தினாலும் உண்மையான வீரன் துவண்டு விடமாட்டான்!
எதிரிகளை எந்த வியூகம் வீழ்த்தும் என்பதில்தான் அவனது கவனம் இருக்கும்.
இந்திய நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் அவரது இயக்கத்தில் நடித்து விட வேண்டும் என்கிற ஏக்கம் இருக்கும்.
.இவ்வளவுக்கும் அவரது படத்தில் நடிப்பவர்களுக்கு ஊதியம் குறைவுதான் என்று சொல்வார்கள்.
வெளியில் பல மடங்கு சம்பளம் வாங்குகிற நடிகர் ஒரு மடங்கு கொடுத்தாலும் போதும் என்று இறங்கி வந்து விடுவார்கள்.
காரணம் அவர் ஒரு பல்கலைக்கழகம்.
தற்போது மணி தனது அடுத்த பட வேலைகளை தொடங்கி விட்டார் என்கிறார்கள்.
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன்,முன்னாள் உலக அழகி ஐஸ்வரியா பச்சன் ஆகியோர் நடிக்கிறார்கள் என முதல் தகவல் தெரிகிறது. அதிகார பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.