திலோத்தமை எந்த பக்கம் போனாலும் அவளைப் பார்ப்பதற்காக பிரம்மனுக்கு நான்கு முகம் என்பதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.
அதைப்போலத்தான் கேப்டன் அமெரிக்காவில் இருந்தாலும் அவரின் பார்வை தமிழ்நாட்டையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
அவரது மகன் விஜயபிரபாகரன்தான் தற்போதைய வைஸ் கேப்டன். விஜயகாந்தின் குணங்களில் முன் கோபம்தான் மைனஸ். மற்றபடி பேச்சுக்களில் மாறுதல் இருக்கிறது.
வழி நடத்துவதற்கு சிறந்த வழி காட்டியாக யாராவது அமைந்தால் அரசியல் வாழ்க்கை அமோகம்.
சென்னையில் நடக்கிற கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார். சமீபத்தில் நடந்த விழாவில் பேசிய விஜயபிரபாகரன் “2 0 1 1 -ல் நடந்த தேர்தலின் போது எல்லா கட்சி தலைவர்களும் கோயம்பேடு நோக்கி வந்ததைப்போல 2 0 1 9 தேர்தலுக்கும் அவர்கள் கோயம்பேடு வந்தாக வேண்டும் ” என்பதாக சொல்லி இருக்கிறார்.
அமெரிக்காவில் சிகிச்சையில் இருக்கும் அப்பா அம்மா அறிவுரை இல்லாமல் இவர் பேசி இருக்க மாட்டார் என்பதால் சர்வ கட்சிகளின் கவனம் தேமுதிக பக்கம் திரும்பி இருக்கிறது.