நடிகர் விஷால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்க பூட்டு விவகாரத்தில் போலீசாருடன் மோதினார் .அம்மோதலில் விஷால் கைது செய்யப்பட்டார்.பின்னர் மாலை விடுவிக்கப்பட்டார் பின்னர் கோர்ட்டுக்கு போய் சங்க அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றியதெல்லாம் தனிக்கதை.இந்நிலையில் விஷால் கை விலங்குடன் போலீ ஸாரால் அழைத்து செல்லப்படும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இது குறித்து விசாரிக்கையில் விஷால் நடித்து வரும் அயோக்கியா படத்தில் இடம் பெறு ம் ஒரு காட்சி என்பது தெரிய வந்துள்ளது.இப்புகைப்படங்களை கசிய விட்டதே பட த்தரப்பு தானாம். எல்லாம் ஒரு விளம்பரத்துக்கு தாங்கோ ….