நீண்ட இடைவெளிக்குப் பின்னர் என்.ஜி.கே. படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
இயக்குநர் செல்வராகவனுக்கு மகாப்பெரிய நன்றியை சொல்லியிருக்கிறார்கள் சூரியாவின் ரசிகர்கள்.
அவர்கள்தான் இன்னும் என்.ஜி.கே.யைப் பற்றி டிவீட் பண்ண முடியலியே என்கிற மனக்குறையில் இருந்தார்கள். மற்ற நடிகர்களின் ரசிகர்கள் எல்லோரும் சந்தோஷமாக அவர்களின் நடிகர்களைப் பற்றி பேசுகிற போது தம்முடைய சூரியாவை பற்றி செய்தி போட முடியவில்லையே என்கிற அவர்களின் ஏக்கம் முடிந்து விட்டது.
படம் சூப்பராக
வந்திருக்கிறது.
“அற்புதமான பயணம் சூரியா சார்.உங்களுடன் பணியாற்றியதில் பெருமையாக இருக்கிறது.அற்புதமான திறமைசாலி, தொழில் பக்தி உள்ளவர் “என்பதாக செல்வராகவன் சொல்லியிருக்கிறார்.
என்.ஜி.கே.படத்தில் பணியாற்றிய 1 2 0 பேருக்கு தங்க நாணயம் வழங்கி பெருமைப் படுத்தி இருக்கிறார் சூரியா,!
படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.