மரணத்தின் வாசல் வரை சென்று திரும்பி இருக்கிறார் தளபதி விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனர் பல்லவி சிங்.
யுபேர் வாடகைக் காரில் பயணித்த அவருக்கு கருகும் வாசனை அடித்திருக்கிறது.
இதை காரின் டிரைவர் உணர்ந்திருக்க வேண்டும்.அவருக்கு என்ன சிந்தனையோ! சாலையை பார்த்தபடியே சென்றிருக்கிறார்.
காலுக்கடியில் வெப்பத்தை உணர்ந்திருக்கிறார் பல்லவி சிங். பதற்றம்.
சாலையில் சென்றவர்கள் காருக்கடியில் நெருப்பு எரிவதை பார்த்து பல்லவி சிங்கை எச்சரிக்க மறு நொடியே காரை நிறுத்த சொல்லி டிரைவருடன் வெளியேறி வெகுதூரமாக சென்று விட்டார்.
பார்த்தால் கார் ஜெகஜோதியாக எரிந்து கொண்டிருக்கிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் தளபதி விஜய்யின் படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் டி.டி.கே.சாலையில் சற்றுத் தொலைவில்தான் இருந்திருக்கிறார்.
எரிந்தது தனது படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் சென்ற கார்தான் என்பது தெரியாமலேயே!