கண்ணடித்து கலக்கிய பிரியாவாரியரை அவ்வளவு சுலபத்தில் மறந்து விட முடியுமா?
காலப்போக்கில் பிரியா வாரியார் என்கிற பெயரை மறந்து கண்ணடிக்கும் நடிகை என்றே கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். பத்திரிகைகளிலும் அப்படியே எழுதிவர அம்மணி அப்செட்!
“ஏன்யா அப்படி சொல்றீங்க?பிரியாவாரியர்னே சொல்லுங்க .காலப்போக்கில் மறந்துடுவாங்கன்னு நினைக்கிறேன்.இருந்தாலும் உறுத்தலா இருக்கு பிரதர்ஸ்.!” என உருகுகிறார்.
“சரி நீங்க யாரைப் பார்த்து நிஜமாகவே கண்ணாடிக்க ஆசைப் படுறீங்க ?”
“அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கிறீங்க .அவருக்குத்தான் இப்ப கல்யாணம் ஆகிப் போச்சே! விடுங்க வடை போச்சு!”
“யாரை சொல்றீங்க? ரன்வீர் சிங்கையா?”
“ஆமாங்க.! வருத்தமாத்தான் இருக்கு. என்ன பண்ணமுடியும்?” என்கிறார்.
இம்புட்டு ஆசைய மனசில வெச்சுக்கிட்டு வெம்பிக்கிட்டு இருந்திருக்கியே புள்ள!