இணையங்களில் வைரலாக வலம் வருகிற செய்திகளில் சூர்யாவின் மகன் தேவ் நடிக்கப்போகிறார் என்பதும் ஒன்று.
உண்மையா?
வீட்டுக்கு விவரம் கேட்கப் போனதில் வாங்கிக் கட்டியதுதான் மிச்சம்!
“கார்த்தி நடிக்கிற படத்தின் பேருதான் தேவ்!”
“இல்ல சூர்யாவின் மகன் தேவ் ஹீரோவாக நடிக்கப்போறார்னு சொல்றாங்களே?”
“பச்சப்புள்ளய்யா தேவ்.அவனை நல்லா படிக்கவிடுங்கப்பா!எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?” என்று கிராண்ட் பாதர் சிவகுமார் கேட்க ,பேசாமல் “பொங்கல் வாழ்த்துகளை சொல்லிவிட்டு “திரும்ப,
இசைஞானி வீட்டில் இருந்தார்.
அவர் எதற்கு இங்கு?
பொங்கல் சாப்பிட வந்திருப்பாரோ?
அதெல்லாம் இல்ல. சிவகுமார் விஜய் டிவியில் பேசிய ‘சிவாஜி ஒரு சகாப்தம்’படத்தைப்பார்க்க சிவகுமாரின் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கே சூர்யா,ஜோதிகா, நாக் ஸ்டுடியோ நிர்வாகி கல்யாணம் ஆகியோரும் இருந்தார்கள்.