நாடே கொண்டாடுது மில்க் ஒயிட் ராணின்னு!
மேக் அப் வேணாம் தமன்னாவுக்கு! அப்படி ஒரு நிறம் வரம் வாங்கி வந்திருப்பார் போல.
நடிகர்களில் தல அஜித்துக்கு மேக் அப் தேவையில்லை.!இப்படியெல்லாம் ஒப்பனை தேவைப்படாத சிலர் இருக்கிறார்கள்.
இந்த மில்க் ஒயிட் பற்றி தமன்னா கவலைப்படுவதில்லை. இந்திய நிறம் என்பது கருப்புதான் என்கிறார்.
கல்யாணத்துக்குப் பிறகு நடிகைகளின் மார்க்கெட் அவுட்டாகி விடுகிறது என்கிற வாதத்தை தமன்னா ஏற்க மறுக்கிறார்.
“சமந்தாவுக்கு கல்யாணம் ஆச்சு,தொடர்ந்து நடிக்கலியா? கரீனா கபூர் பிள்ளை பெத்த பிறகும் தொடர்ந்து டிமாண்டில் இருக்கிறாரே! வித்யாபாலன் நடிக்கிறாரே! திறமை இருந்தால் நடிக்க தடை இல்லை. கல்யாணம் ஆன பிறகு நடிக்காமல் இருப்பதற்கு அவரவர்க்கு பல காரணங்கள் இருக்கலாம். பிள்ளையை பெத்துட்டா நடிக்கக்கூடாது என்பதை கேட்டால் எனக்கு சிரிப்புதான் வரும்.அந்த எண்ணத்தையே மறந்திருங்க ” என்கிறார் தமன்னா.