1996-ல் உலகநாயகன் கமல்ஹாசன்-இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘இந்தியன்’ திரைப்படம். தற்போது இந்தியன் இரண்டாம் பாகமாக உருவாகிறது. ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.மேலும் துல்கர் சல்மான், முதல் பாகத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்த நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே தொடங்குவதாக இருந்தது. பின்னர் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதற்கிடையே ‘இந்தியன் 2’ கைவிடப்பட்டதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவிய து. ஆனால், படக்குழு திட்டவட்டமாக மறுத்தது.தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை, சிங்கப்பூரில் உள்ள கமல்ஹாசன் திரும்பி வந்ததும் வரும் 18-ந்தேதி பொள்ளாச்சியில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக ரூ.2 கோடியில் பிரம்மாண்ட செட் போட்டுள்ளனர். படத்தின் முக்கிய காட்சிக்காக அந்த செட் தயாராகியுள்ளது.முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் முடிந்ததும்,இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு உக்ரைனுக்கு செல்லவுள்ளது. ரவிவர்மன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். லைகா பட நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.வரும் 18 ந்தேதி இப்படத்தின் மற்றொரு லுக் வெளியிடப்படவுள்ளதாம் ,இதில் முதலில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சித்தார்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.