கசிவதெல்லாம் உண்மையாகி விடுவதில்லை.உண்மையே கசிந்தாலும் சினிமாவில் கடேசி நேர மாறுதலுக்கு உட்பட்டவை! அப்படித்தான் இந்த செய்தியையும் வாசிக்க வேண்டுகிறோம். இயக்குநர் முருகதாசின் அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எத்தகைய வேடம் என்பது பற்றி காத்து வாக்கில் ஒரு தகவல். அதாவது பல்லாண்டுகளுக்குப் பின்னர் போலீஸ் வேடம் கட்டப் போகிறாராம்.லைகா நிறுவனத் தயாரிப்பில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு.அனிருத் இசை என சொல்லப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் லைகா என்பதால் பிரமாண்டத்துக்கு குறை இருக்காது.