மக்கள் செல்வன் விஜயசேதுபதிக்கு வயது நாற்பத்தி ஒன்று! வாழ்த்துகள்.
யதார்த்த நடிப்பின் நாயகன் என சொல்லலாம். போலித்தனம் இல்லாத மனிதர். தனக்கென ஒரு வலிமையான இடத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார். ஈரமான மனசு.எளிமையான வாழ்க்கை. உயர்ந்த நிலைக்கு வந்து விட்டாலும் பிறரிடம் நடிக்கத் தெரியாத நல்ல மனிதர். அவரை ஆந்திராவில் கொண்டாடுகிறார்கள் ஜமீன்தார் ராஜபாண்டியாக!
அமிதாப்,சிரஞ்சீவி,நயன்தாரா ,தமன்னா ஆகியோர் நடித்திருக்கும் சியேரா எனும் வரலாற்று படத்தில் பிரிட்டீசாரை எதிர்க்கும் ஆந்திர புரட்சியாளருக்கு உதவுகிற ஜமீன்தாரராக நடித்திருக்கிறார் விஜயசேதுபதி.