ஒருவரின் வாழ்க்கையை திரையில் பதிவு செய்கிற போது அடுத்தவர் குடும்பத்தை நோகடிக்காமல் எடுக்கவேண்டும் !
இல்லாவிட்டால் சிக்கல்கள்தான்.
மறைக்கப்பட்ட ரகசியங்களை அரங்கத்திற்கு கொண்டு வந்து விடுவார்கள்.அந்தரங்கம் அம்பலமாகிவிடும்.
என்.டி.ஆரின். வாழ்க்கையை படமாக்கியவர்கள் அதில் நடிகையர் திலகம் சாவித்திரி தொடர்பான சில காட்சிகளை வைத்திருக்கிறார்கள்.அதுதான் வம்பாகிவிட்டது.
சொந்தப்படம் எடுத்து கடுமையாக சூடு பட்டவர் சாவித்திரி என்பது உண்மை. அது அவரை எங்கே கொண்டுபோய் சேர்த்தது என்பது எல்லோர்க்கும் தெரிந்த உண்மைதான்.
என்.டி.ராமராவ்,ஏ.நாகேஸ்வரராவ் ஆகிய இருவரும் அந்த கஷ்டகாலத்தில் அவர்க்கு சொன்ன அறிவுரைகளை படத்தில் சேர்த்திருக்கிறார்களாம்.சற்று கடுமையாக இருந்திருக்கும்போல. சுருக் கென தைத்திருக்கிறது சாவித்திரி குடும்பத்திற்கு!
நியாயமா என்று கேட்கிறார்கள்.
எங்களை இப்படி இழிவாக காட்டியவர்கள் ராமாராவ்,நாகேஸ்வரராவ் இருவரும் அமெரிக்காவுக்கு ஏன் போனார்கள் என்பதையும் சொல்லியிருக்க வேண்டியதுதானே? மதுவினால் பாதிக்கப்பட்டதற்கு சிகிச்சை எடுப்பதற்கு சென்றதை ஏன் சொல்லவில்லை என கேட்கிறார்கள்.
இதுவும் நியாயம்தானே?