அப்பாடா…ஊர்வலம் போன காதல் கதைகளுக்கெல்லாம் நேற்றோடு முடிவு கட்டியாகிவிட்டது.
“அவருக்கு நான்,எனக்கு அவர் “என கட்டிப்பிடித்து கல்யாண சேதியை சொல்லிவிட்டார் விஷால்.
‘பெல்லி சூப்பு’ ‘அர்ஜுன் ரெட்டி’ ஆகிய படங்களில் நடித்தவர்தான் மனைவியாகப்போகிற அனிஷா அல்லா.
என்ன சொல்கிறார் விஷால் ?
“சந்தோசமோ சந்தோசம் மிகப்பெரிய சந்தோசம்! என் வருங்கால மனைவியின் பெயர் அனிஷா அல்லா.பொண்ணு சம்மதம் சொல்லியாச்சு. என்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு தயாராகிட்டேன்.கல்யாண தேதியை சீக்கிரமே சொல்லிடறேன்.” என்கிறார்.
வருங்கால வீட்டம்மா என்ன சொல்கிறார்?
“இவர்தான் என் வாழ்க்கை துணைன்னு முடிவு பண்ணியாச்சு.அவருடன் தான் என் பயணம்.அவர் என்ன நினைக்கிறாரோ அதுக்கு பக்க பலமா நானும் இருப்பேன்.”என்கிறார் அனிஷாவிஷால்!.