நாடு முன்னேறிடிச்சின்னு எத வெச்சு சொல்றாங்கன்னு தெரியலைங்க! இங்கே இருக்கிற படத்தைப் பார்த்திட்டு சொல்லுங்க.!
பொதுவா அரசு விடுமுறை என்றால் சென்னையில் பார்க்கக்கூடிய இடங்களாக அண்ணா,எம்.ஜி.ஆர்.சமாதி,ஜெயலலிதா, இப்ப கருணாநிதி ஆகியோரின் சமாதிகள் இருக்கின்றன.
முன்னெல்லாம் சென்னைக்கு வருகிற வெளிமாவட்ட மக்கள் செத்த காலேஜ்,உயிர் காலேஜ் என்று மியூசியம், மிருககாட்சி சாலைக்குப் போவார்கள்.
இப்பத்தான் அடிஷனலாக சமாதிகள் சேர்ந்திருக்கின்றன.
எம்.ஜி.ஆர் .சமாதிக்கு வருகிறவர்கள் அன்றிலிருந்து இன்று வரை சமாதியின் மீது காது வைத்து சத்தம் வருகிறதா என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு புத்திசாலிகள் இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர்.கட்டியிருந்த கடியாரத்திலிருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று எவனோ புத்திசாலி கிளப்பிய பொய் இன்றும் உயிருடன் இருக்கிறது .அதைத்தான் இந்த புத்திசாலிகள் கேட்கிறார்கள்.
நல்ல வேளைங்க! ஜெயலலிதா சமாதியில் சசிகலா ஓங்கி கையடிச்சு பண்ணிய சத்தியத்தின் சத்தம் கேட்குது என்று யாரும் சொல்லல.
சொன்னால் அங்கேயும் போய் காதை வப்பாங்க!