சினிமா பிரபலங்கள் மனம் விட்டுப் பேசினால் மனதில் உள்ள அத்தனை உண்மைகளும் வந்துவிடும்.
அதில்தான் எத்தனை சோகக்கதைகள்.
துரோகங்களும் வெளிவந்து விடும் .
ஆனால் யாரும் அதை சொல்வதில்லை.மனசுக்குள் வைத்து அழுத்திக் கொள்வார்கள்.
நடிகை டாப்சியும் அப்படித்தான் கதறி இருக்கிறார்.
“நான் நைன்த் படித்தபோது சீனியர் ஒருவரை காதலித்தேன்.அதுதான் எனது முதல் காதல். அவரோ டென்த் எக்ஸாமில் அதிக மார்க்குகள் வாங்க வேண்டும் என்பதால் என்னை தவிர்க்கத் தொடங்கினார்.
அந்த காலத்தில் செல்போன்கள் கிடையாது. பப்ளிக் பூத்தில் இருந்து ஏன் என்னை காதலிக்க மறுக்கிறே என்று கதறி அழுவேன்.அவன் சட்டை பண்ண மாட்டான்.
இப்படித்தான் எனது அடுத்தடுத்த காதல்களும் பங்சர் ஆகிப் போச்சு. சரி நமக்கேத்த ஆள் இன்னும் வரவில்லை என்று என்னை நானே ஆறுதல் படுத்திக்கொள்வேன்..” என்கிறார் டாப்சி.