“ரஜினி அங்கிள்” என்று மழலை பேசிய பேபி மீனா பின்னாட்களில் அவரது தர்மபத்தினியாக நடிக்கவில்லையா, சினிமாவுக்கு ஏதுசார் வயசு ?
அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரியான நடிகருடன் ஜோடி கட்ட 1 6 வயசு பச்ச மண்ணும் எஸ் சொல்லி விடும்.!
இப்ப முருகதாஸ் டைரக்சனில் ரஜினி நடிக்கிறார்.ஆனால் இன்னும் நாயகி யார் என்பதை முடிவு செய்யவில்லை.
இதை பற்றி முருகதாஸ் சொல்வது என்ன?
” இந்த படம் முழுக்க முழுக்க பொழுது போக்குப்படம். பேட்ட படத்தில் அவருக்கு இணையாக சிம்ரன்,திரிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதற்கு முந்தைய படங்களான கபாலி,காலா வில் ஈஸ்வரிராவ், ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.அதையும் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் யார் ஜோடி என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை”என்கிறார்.
ஆனால் இண்டஸ்ட்ரியில் கீர்த்தி சுரேஷ் என்பதாகப் பேசுகிறார்கள்.