மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் பி.சி.ஸ்ரீராமும் ஒருவர்.வடநாடும் கொண்டாடும் தமிழர். இவரது பாணியே தனி!
கருத்து சொல்வதிலும் துணிச்சல் உள்ளவர்
.”சினிமாக்காரர்கள் 100 வருஷம் அரசியலுக்கு வரக்கூடாது “என்று சொன்னவர். ஆனாலும் மோதிப்பார்த்து விடுவோம் என்றுதான் துணிச்சலுடன் கமல்ஹாசன்,ரஜினி ஆகியோர் வந்திருக்கிறார்கள்.
விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் “அரசியலுக்கு வர்றதுக்கு எல்லோருக்கும் உரிமை இருக்கு ,யார் வேணும்னாலும் வரலாம்.ஆனா சி.எம்.ஆகுறதுக்கான தகுதியே சினிமாவில் ஹீரோவாக இருக்கணும்கிற மாதிரி ஆக்கிட்டாங்க.அந்த சினிமா மாயை இங்க தகர்ந்திடுச்சி.சினிமாவை சினிமாவத்தான் பார்க்கிறாங்க.தான் ரசிக்கிற ஒரு நடிகர் சினிமாவில் இருக்கிறதாலதான் கொண்டாடுறாங்க..ஆனா தமிழ்நாடு அளவுக்கு வேற எந்த மாநிலத்திலேயும் சினிமாவும் அரசியலும் ஒண்ணா இல்ல.இனி சினிமா மாயை அரசியல்ல செல்லாது” என்கிறார் ஸ்ரீ ராம்.