மதுரை ஆதினம் பெரியவரா, நித்தியானந்தா பெரியவரா?
ஹீரோஉயர்வா ,ஹீரோயின் உயர்வா?
ஹீரோயின் வருகிறபோது ஹீரோ எழுந்து நின்றால் ஹீரோயின்தான் டாப்..
“அந்தாளுதான் கதாநாயகன்.அவரை போடுங்க”என்று தயாரிப்பாளருக்கு எந்த நடிகை அப்பாயிண்ட்மெண்ட்ஆர்டர் கொடுக்கிறாரோ அந்தம்மா தான் சுப்பீரியர்.
“அந்த நடிகை சப்பை.அவரைப் போடாதே.இந்த நடிகையைப் போடு “என்று எந்த நடிகர் குச்சியை தூக்குகிறாரோ அவர்தான் படத்துக்கே சீ ஃ ப்.
இதுதான் சினிமா! பாலிவுட்டில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
தீபிகா படுகோனே!
அண்மையில் ஒரு படத்தில் நடிப்பதற்காக வாங்கிய பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டார்.
என்னய்யா நடந்தது?
தீபிகாவே சொல்கிறார்.:
“என்னோடு நடித்த ஹீரோவுக்கு என்னை விட அதிக சம்பளம்னு கேள்விப்பட்டேன்! என்னுடைய ரேஞ்ச் என்ன,என்பது எனக்குத் தெரியும்.என்னுடைய மதிப்பு எனக்குத் தெரியும்!நான் நடித்த படங்கள் நல்ல கமர்ஷியல் ஹிட் கொடுத்துள்ளன. அந்த ஹீரோ நடித்த படம் கமர்ஷியலா ஹிட் அடித்ததா?வசூலிக்கவில்லையே? பிறகு எதுக்கு எனக்கு குறைந்த சம்பளம்,அவருக்கு அதிக சம்பளம்? இது என்ன நியாயம். வேணாமே அந்தப்படம் .அதான் திருப்பி கொடுத்து விட்டேன் “என்கிறார்.