அந்த கேரக்டரில் நடிப்பதற்கு உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் இருக்க வேண்டும்.அது மேலை நாடுகளில் மட்டுமே சாத்தியம்.
இது மட்டுமல்ல ,யார் யாருடனோ நிர்வாணமாக கட்டி உருள வேண்டும்.கடவுள் சித்தம் இருந்தால் அந்த கண்றாவி வேலையையும் செய்தாக வேண்டும்!
இப்படி எடுக்கப்படும் படங்களுக்கு போர்ன் பிலிம் என்று பெயர்.அந்த காட்சிகளில் நடிப்பவர்களுக்கு போர்ன் ஆர்ட்டிஸ்ட் என்று பெயர்.
இவ்வளவு விளக்கம் வெங்காயமெல்லாம் சொல்லனுமா..ப்ளு பிலிம்னா தெரியும்யா! என்கிறீர்களா ?
அதுவும் சரிதேன்!
ப்ளு பிலிம்ல அந்த சமாசாரம் மட்டுமே இருக்கும்.போர்ன் பிலிம்ல நிர்வாணம் மட்டுமே!
அத்தகைய போர்ன் நடிகையாக ரம்யாகிருஷ்ணன் நடிக்கிறார்.
படத்தின் பெயர் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்துக்குள்ளேயே குட்டி படமாக மல்லு கட் வருகிறது.
இந்த படத்தில் முதலில் நதியா நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் நடிக்கவில்லை.மேலும் விஜயசேதுபதி,சமந்தா,பகத் பாசில் ஆகியோரும் நடிக்கிறார்கள். தியாகராஜா குமாரராஜா இயக்கம்.