சூப்பர் ஸ்டார் ரஜினியால் அரசியல் கட்சியை நடத்த முடியுமா?
அந்த சந்தேகம்தான் சாமி தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கு! முதலில் அவரால் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியுமா? அவருக்கு அடுத்த கட்ட தலைவர்கள் யார் என்று சொல்ல முடியுமா? குடும்பத் தலையீடு இல்லாமல் கட்சியை கொண்டு போக முடியுமா?இப்படி இன்னும்நிறைய கேள்விகள் இருக்கு சாமி!
இப்படிப்பட்ட நிலையில்தான் ரஜினியால் பெரிதும் மதிக்கப்படக்கூடிய ஆர்.எம்.வீரப்பன் பகிரங்கமாக ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார்.
அப்போது தான் ரஜினி என்னோடு சேர்ந்து அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறார் என்றெல்லாம் கூறினார்கள்.
அப்போது அவரை அரசியலுக்குள் வரவிடாமல் தடுத்தவர்களும் இருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் சிறந்த நடிகர். நல்ல மனிதர். ஆனால், அவரால் ஒரு நிலையான அரசியல் கட்சியை நடத்த முடியுமா? சந்தேகம்தான்!.
நான் பல நேரம் அவரோடு விவாதித்து இருக்கிறேன். அவர் மிகச்சிறந்த மனிதர். சிந்தனையாளர். ஆன்மிக உணர்வு மிகுந்தவர். தமிழகத்துக்கு கிடைத்த மாபெரும் நடிகர். ஆனால் அவரது அரசியல் நிலைமைகளை பற்றி கூற தயாராக இல்லை.”என்று ஆணி அடித்தவர் தற்போதைய அதிமுகவைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.
“இப்போது இருப்பது அ.தி.மு.க.வே இல்லை. அ.தி.மு.க. என்று எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கிற ஒரு பெரிய கூட்டுக்கம்பெனி தான் இருக்கிறது.
அவர்களுக்கு அரசியலை பற்றி கவலை இல்லை.
மக்களை பற்றி கவலை இல்லை. தனது பதவி காப்பாற்றப்பட வேண்டும். தன் பதவியின் மூலம் பொருள் ஈட்ட வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.” என்று கடுமையாக சாடி விட்டார்.