நடிகை சினேகா-பிரசன்னா தம்பதியினருக்கு இன்று சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அதிகாலை 1.55 மணிக்கு சிசேரியன் மூலம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் சினேகா. பத்தாண்டுகளுக்கு மேல் நாயகியாக நடித்து வந்த சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் சினேகா சில படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் கருவுற்றார். அதன் பிறகு படங்களில் நடிப்பதையும் நிறுத்திக் கொண்டார். இந்த நிலையில், இன்று அதிகாலை 1.55 மணிக்கு சினேகாவுக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தைப் பிற ந்தது. சினேகாவும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனையில் தெரிவித்தனர். ஆண் குழந்தைப் பிறந்த மகிழ்ச்சியை இனிப்பு வழங்கிக் கொண்டாடினார் நடிகர் பிரசன்னா.