மகளை ஒத்தையில விட்டுப் போறமேன்னு போலீசை காவலுக்கு வெச்சா அந்த போலீசே அந்த பொண்ணை கடத்திட்டுப் போன கதையா இருக்கு திருட்டு விசிடி விவகாரம்!
பேட்ட,விஸ்வாசம் இரண்டு படமும் ரிலீஸ் ஆனதும் தமிழ் ராக்கர்சும் படத்தை ரிலீஸ் பண்ணிட்டாங்க.
அரசாங்கத்தால் தடுக்க முடியல. அவனுங்களை பிடிக்கவும் துப்பில்ல.
பார்த்தான் திருட்டு வி.சி.டி .க்காரன்.
அரசாங்க பஸ்சிலேயே பேட்ட படத்தை ரிலீஸ் பண்ணிட்டான். கரூர்- சென்னை இடையேயான பஸ்சில் பேட்டஓடிருக்கு..!
நம்ம மக்களும் கடமை உணர்ச்சியோடு படத்த பார்த்திட்டு டிவிட்டர்,பேஸ்புக்ல பெருமையோடு அத செய்தியாக்கிட்டாங்க. சூப்பர்ல.!
அந்த பஸ்ல ஒரு ஆள் கூட ரஜினி ரசிகர் இல்லையா?