சினிமாக்காரர்களை மிரட்டுவது அரசியல்வாதிகளுக்கு துணைத் தொழிலாகி விட்டதுபோலும்!
தளபதி விஜய்யை அதிமுகவினர் மிரட்டி பணிய வைத்தார்கள்.ஆட்சி அதிகாரம் அதிமுகவிடம் இருந்ததால்.!
தற்போது இதே நிலைமை மும்பையிலும் ஏற்பட்டிருக்கிறது. சிவ சேனாவைப் போல கர்ணி சேனா என்கிற அமைப்பும் மிரட்டல் வேலைகளில் இறங்கி இருக்கிறது.
ஜான்சிராணியைப் பற்றி நடிகை கங்கனா ரனாவத் திரைப்படம் எடுத்திருக்கிறார்.
இந்த படத்தை முதலில் இயக்கியவர் கிரிஷ். தமிழிலும் படம் இயக்கியவர்.
படப்பிடிப்பில் கிரிஷ்க்கும் கங்கனாவுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் பாதியிலேயே கையை கழுவிக்கொண்டு போய்விட்டார்.மீதியை கங்கனா இயக்கி படத்தை முடித்திருக்கிறார்.
இதில் என்ன பிரச்னை என்றால் ஜான்சி ராணிக்கும் ஆங்கிலேய அதிகாரிக்கும் ரகசிய தொடர்பு இருந்ததைப் போல கதையைக் கொண்டு போயிருக்கிறார்களாம்.
“இல்லை.அப்படியெல்லாம் இல்லை.ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய வீராங்கனையைப் பற்றி இப்படியெல்லாம் சித்தரித்தால் சீறி எழுவோம் சிதைத்து விடுவோம்”என கர்ணிகா சேனா மிரட்டியது.
பதிலுக்கு கங்கனா “அந்த வேலையெல்லாம் எங்கிட்ட எடுபடாது. நானும் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவதான். கர்ணி சேனாவையே காலி பண்ணிவிடுவேன்.கபர்தார் “என பதில் எச்சரிக்கை விட்டார்.
இன்று கர்ணி சேனா மிரட்டி இருக்கிறது.
“அந்த மிரட்டல் வேலை எல்லாம் எங்களிடம் எடுபடாது.நீ சினிமா தொழிலிலேயே இருக்க முடியாது. மகாராஷ்டிரா வீதிகளில் நடக்க முடியாது. படப்பிடிப்பு செட்டெல்லாம் அக்கினி பகவானுக்கு அர்ப்பணமாகி விடும் .ஜாக்கிரதை “என்பதாக தலைவர் அஜய் சிங் படக்குழுவினருக்கு கடிதங்கள் எழுதியிருக்கிறார்.
படம் 2 5 -ம் தேதி ரிலீஸ். என்ன ஆகப்போகுதோ!
படத்தை குடியரசுத் தலைவருக்குப் போட்டுக்காட்டவும் கங்கனா முடிவு செய்திருக்கிறார்.பார்த்து செய்யுங்கய்யா!