மெர்சல் படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா ஆகியோரது நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. தற்காலிகமாக இப்படத்திற்கு தளபதி 63என பெயரிடப்பட்டுள்ளது. .இப் படத்தின் பூஜையில் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குநர் முத்துராஜ்உள்பட பலர் கலந்து கொண்டனர்.விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகளை மையப்படுத்தி படம் உருவாகிறது. இப்படத்தில்,கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகை இந்துஜா இப் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கஉள்ளதாகவும் கூறப்படுகிறது