சேரனின் திருமணம்.சில திருத்தங்களுடன் என்கிற படத்தின் ஆடியோ விழா படு அமர்க்களமாக நடந்தது .
கர்ப்பிணி மாதிரி சற்று உடல் கனத்து வந்திருந்தார் மீனா. என்றும் மாறாத இளமையுடன் சுகன்யா. இயக்குநர் ராமதாஸ்,ஜெயபிரகாஷ், இன்றைய இடது சாரி இயக்குநர்கள் என பலர் வந்திருந்தனர்.
இயக்குநர் பாரதிராஜா கலந்து கொண்டு சேரனை வாழ்த்திப் பேசினார்.
அவர் கூறியதாவது.;
“திருமணங்களில் நடக்கும் சிக்கல்களை சிறப்பாக சொல்லி இருக்கிறார் சேரன்.சிறந்த கதாசிரியர் சேரன். எங்களை முன்னோடிகள் என்று சொல்லி எங்களை முந்திக் கொண்டு ஓடுகிறார்கள் இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்கள்.மாறி செல்வராஜ்,பாரதி லெனின் ஆகியோர் உலக அளவில் போட்டியிடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்.சமூக அக்கறையுடன் இருக்கிறார்கள்.அவர்களை வாழ்த்துகிறேன்.”என்று பேசினார்.