இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் உருவாகி 2006-ல்வெளியான ‘தாமிரபரணி’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பானு, தொடர்ந்து, அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர், மூன்று பேர் மூன்று காதல், தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது வெளியாகவுள்ள ‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’ என்ற படத்திலும் அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை பானுவுக்கும் பிரபல மலையாள பின்னணி பாடகி ரிமி டோமி யின் சகோதரர் ரிங்கு டோமிக்கும் வரும் 23-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதைதொடர்ந்து இவர்களது திருமணம் வரும் 30ஆம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ளது. இது ஒரு காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது பாம்புச்சட்டை மற்றும் சகுந்தலாவின் காதலன் ஆகிய படங்களில் நடித்து வரும் பானு திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்கிறார்.