சோதாவாக இருந்தாலும் பரவாயில்ல. அவனோ கோதா பல கண்ட பலசாலி. தன் வழின்னு போய்க்கொண்டு இருப்பவனை “அய்..ய்.! ஆர்ம்ஸை பாரு,தொடையைப் பாருன்னு நக்கலடிச்சா “சும்மா இருப்பானா? அந்த மாதிரி சிலர் சிம்புவை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்திருக்கிறார்கள்.
“தம்பிகளா,வந்தா ராஜாவாகத்தான் பட ரிலீஸ் பண்றப்ப கட் அவுட்டுக்கு பால் ஊத்தாதே,வெட்டிச்செலவு பண்ணி பிளக்ஸ் வைக்காதே.அந்த காசில் உங்க அம்மா அப்பாவுக்கு சட்டை வேட்டி எடுத்துக் கொடுத்து சந்தோஷப்படுத்துன்னு “சிம்பு கோரிக்கை விடுத்ததை எல்லோருமே பாராட்டினார்கள். வாழ்த்தினார்கள்.நல்ல காரியம்தானே!
ஆனால் சிலர் நக்கல் பண்ணி “சிம்புவுக்கு இருக்கிறதே நாலஞ்சு பேருதான்.அதுக்கு இந்தளவுக்கு பில்டப் தேவையா”ன்னு எழுதிட்டாங்க.
தம்பி சிம்பு பொங்கிட்டார்.
“அந்த ஒன்றிரண்டு பேர் அண்டா அண்டாவா பால் ஊத்துங்க கட் அவுட் வையுங்க”ன்னு வீடியோவை விட்டிருக்கிறார்.
பிள்ளைக என்னென்ன பண்ணப்போகுதுகளோ!