1990 -ம் ஆண்டு நீங்களும் ஹீரோ தான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் இயக்குனர் வி.சேகர். குடும்பப்பாங்கான படங்களை இவர் ‘பொண்டாட்டி சொன்னா கேக்கணும்’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘பொங்கலோ பொங்கல்’ உள்ளிட்ட பல குடும்பப்பாங்கான படங்களை இயக்கியவர் .தன மகன் கார்ல்மார்க்ஸ் -அருந்ததி ஆகியோரின் நடிப்பில் சரவனபொய்கை என்ற படத்தை இயக்கி தயாரித்து வருகிறார்.இந்நிலையில்,இவர் தற்போது சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட கோயில் சிலைகளை வி.சேகர் தனது வீட்டில் வைக்கப்பட்டு இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது. சிலை கடத்தல் வழக்கில் முன்பே பிடிப்பட்ட 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வி.சேகரை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கல்லூரி மாணவர் விஜயராகவன் உள்பட மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.இதன் காரணமாக தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!