இந்திய விஞ்ஞானிகளை மிரளச்செய்த வழக்கு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதானது….!
எதை அடிப்படையாக வைத்து அவரை குற்றவாளி என அரசு வழக்குத் தொடர்ந்ததோ தெரியாது….
ஆனால் உச்ச நீதிமன்றம் அவரை குற்றமற்றவர் என விடுவித்தது.
அந்த விஞ்ஞானி நம்பி நாராயணனாக ஆர்.மாதவன் நடித்து இயக்க நான்கு மொழிகளில் தயாராகிறது.
கேரளத்தில் நடைபெற்றுவருகிற படப்பிடிப்பில் சூர்யாவுக்கும் முக்கிய கேரக்டர். தற்போது சூர்யா மலையாள தேசத்தில்தான் இருக்கிறார்.
இதற்கிடையில் அவர் ஏவி.எம்.தயாரிப்பில் நடிப்பதாக ஒரு செய்தியை கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்.தவறான செய்தி! படத் தயாரிப்பிலிருந்து ஏவி.எம். நிறுவனம் எப்போதோ விலகி விட்டது.