இயக்குநர் கே.வி.ஆனந்த் துணிந்துதான் தேன்கூட்டில் கை வைத்திருக்கிறார். தேனீக்கள் கொட்டாமல் தேன் எடுக்கும் வித்தை தெரிந்தவர்தான்.
அவரது ‘காப்பான்’ படம் அத்தகையதுதான் என்கிறார்கள்.
இந்தியா மாதிரி பரந்துபட்ட நாட்டில் அனாமதேயங்களுக்குக் கூட மிரட்டல் வருகிறபோது பிரதமருக்கு அத்தகைய ஆபத்துகள் இருக்காதா?
சந்திரகாந்த்வர்மா இந்தியாவின் பிரதமர்.
படங்களில் கூட ஒரு தமிழனை பிரதமராக்க முடியலியே!
தமிழன் கிங் மேக்கர்டா இப்படி பெருமைப்பட்டுக்கொள் என்கிறது இந்திய அரசியல் அமைப்பு.!
நமக்கெதுக்கு ப்ரோ இதெல்லாம் என்கிறீர்களா?
சின்ன ஆதங்கம்தான் அதை வெளிப்படுத்தினோம்.
பிரதமராக இருந்த இந்திராகாந்தி அம்மையாரை துப்பாக்கி ரவைகளால் துளைத்தது அவரது பாதுகாப்புப்படையை சேர்ந்த ஒருவன்தானே!
இப்ப அதெல்லாம் தேவையா ?கேள்விப்பட்டதை சொல்வோம்!
சூர்யாவும் சமுத்திரக்கனியும் பிரதமரின் பாதுகாப்புப்படையை சேர்ந்தவர்கள்.அவர்கள் எப்படி பி.எம்.மோகன்லாலுக்கு வருகிற பேராபத்தை தடுக்கிறார்கள் என்பதுதான் கதையாம்! இதில் ஆக்சன் சீக்வென்ஸ்களை கடுமையான ரிஸ்க் எடுத்து சூர்யா நடித்திருக்கிறார் என்கிறார்கள்.
கனிக்கு வேற லெவலாம் இந்தப்படம்.