மார்ச் மாதம் தேர்தல் அறிவிப்பு வந்து விடும்.
அதற்குள் இந்தியன் 2 வின் உலகநாயகனின் போர்ஷனில்பாதியாவது முடித்து விட வேண்டும் என்கிற பரபரப்பில் வில்லனை தேடி வருகிறார்கள்.
அக்சய் குமார்,அஜய் தேவ்கன் இருவரது கால்ஷீட் தேதிகளும் ஒத்து வரவில்லை.இதனால் அபிசேக் பச்சனை அணுகி கேட்கலாம் என ஷங்கர் தரப்பு முடிவு செய்திருக்கிறது.
தற்போது சென்னைக்கு வெளியில் பிரமாண்டமான செட் போட்டு கமல்,காஜல் ,டில்லி கணேஷ் தொடர்பான காட்சிகளை படமாக்கிக் கொண்டிருக்கிறார்.
ஏப்ரலில் வேட்பாளர் தேர்வு ,கூட்டணி சேருதல்,பிரசாரம் என பிசியாகிவிடுவார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.
ஆனால் அதைப்பற்றிய கவலையெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இல்லை. அவர்தான் இன்னும் கட்சியை ஆரம்பிக்கவே இல்லையே!