கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜு முருகனின் உதவி இயக்குநரான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் ஞானவேல் ராஜாவின் தந்தை ஈஸ்வரன், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், லெனின் பாரதி, சிம்பு தேவன், எச். வினோத், நலன் குமாரசாமி, சிறுத்தை சிவா, மௌனகுரு சாந்தகுமார், எழில், கரு.பழனியப்பன்,தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, 2D ராஜசேகர், பாடகர் விஜய் யேசுதாஸ், சக்தி பிலிம்ஸ் பேக்டரி சக்திவேல், நடிகர் சன்னி ஜி, ரமேஷ் பாபு மற்றும் இப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

இயக்குநர் கரு.பழநியப்பன் பேசியதுதான் விழாவின் ஹைலைட்!
“இசை அமைப்பாளர் ஷான் ரோல்டனிடம் ‘என்னப்பா இப்படி வித்தியாசமா பேர் வெச்சிருக்கே’ன்னு கேட்டேன். ‘எந்த பேர வெச்சாலும் சாதியை கண்டுபிடிச்சிடிராய்ங்க.இப்படி பேர வெச்சா கண்டுபிடிக்க முடியாதுல்ல’ன்னார். இதுவும் நல்ல ஐடியாவாதான் இருக்கு.
இப்பல்லாம் குடும்பப் படங்களுக்குத்தான் கூட்டம் கூட்டமாக வர்றாங்க, விஸ்வாசம் வெற்றி பெற்றதுக்கு காரணம் அது குடும்பப் படமாக இருந்ததுதான்!”என்றார் பழநியப்பன்