சென்னை-மும்பை மேட் சங்கீத சிலை லண்டனுக்கு கிடைக்கணும்கிற விதி இருந்தா அதை யாரால மாத்த முடியும்?
உள்ளூர் மேளங்களை வெச்சு நாம்ப ஒப்பேத்த வேண்டியதுதான்! உலகநாயகனின் மகள் ஸ்ருதிஹாசன் பெரிய கிடார் பைத்தியம். ராக் ஸ்டார் ஆகணும்கிற லட்சியம்!
இங்க சினிமாவில் நடிக்கிற வாய்ப்பு அவ்வளவாக இல்லை.லண்டனுக்குப் போய் விட்டார் ஸ்ருதி.அங்க அவருடைய நண்பர் மைக்கேல் கொர்செல் ஹெல்ப் பண்றார்.
இங்கே எத்தனையோ சபாக்கள் இருக்கிற மாதிரி லண்டனில் பல்லாண்டுகளாக புகழ் பெற்ற ஓர் இசை சபா இருக்கு.
அங்கே அதிரடியாக அவருடைய நிகழ்ச்சி நடக்கப்போகுது. அங்கே வரவேற்பு பிரமாண்டமாக இருந்து விட்டால் ஸ்ருதி இந்தியாவுக்கு திரும்புவது சந்தேகம்தான் என்கிறார்கள்..
எப்படியானால் என்ன அதுவே அவருக்கு புகுந்த வீடாக இருந்து விட்டால் என்ன செய்ய முடியும்?